போலியான உரிமை கோரலின் பேரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கைது

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலியான உரிமை கோரல்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின்பேரில் , போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் விசாரணைக்காக இன்று முதல் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை சுமார் 3.15 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி சித்தி ஃபரா இப்ராஹிம் உத்தரவிட்டார்.

49 வயதுடைய இரு சந்தேக நபர்களும், RM19,980 மதிப்புள்ள claims களில் போலியான விவரங்கள் அடங்கிய பணப் பற்று சீட்டுக்கள் மற்றும் கட்டளைகளை சமர்ப்பிக்க ஒரு நிறுவன மேலாளரை ஊக்கப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இவை 2019 ஆம் ஆண்டில் Julau மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்யப்பட்ட் சேவைகள் மற்றும் கட்டிட பழுதுபார்ப்புகளுக்கான போலியான உறுதிப்படுத்தல்கள் குறித்த claims இல் இணைக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here