சமீபத்திய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சபா மற்றும் ஜோகூர் மாநிலத்தில் குறைந்துள்ளது, அதே நேரத்தில் பகாங்கில் நேற்று இரவு 314 பேராக பதிவாகிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) தெரிவித்துள்ளது.
சபாவில் நேற்றிரவு 927 குடும்பங்களைச் சேர்ந்த 2,639 பேர் அங்குள்ள 19 நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர். அனால் இன்று காலை 673 குடும்பங்களைச் சேர்ந்த 1,723 பேராக குறைந்துள்ளது. இவர்கள் அனைவரும் அங்குள்ள 10 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூரில், இரவு 8 மணி நிலவரப்படி நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,216 நபர்களாகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்று நன்பகல் 2 மணிக்கு 2,464 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.