வியாபாரியை மிரட்டி, பணம் பறித்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று பேர் மீது இன்று பாகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முஹமட் ஃபைருல் முகமட் அல்வி, 23, முஹமட் இம்ரான் ஃபைஸ் யாஹ்யா, 28, மற்றும் ஒரு 17 வயது வாலிபர் ஆகியோர், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஃபெல்டா செர்ட்டிங் ஹிலீர் 5 இல் உள்ள ஒரு வீட்டில், வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், மாவட்ட நீதிமன்ற நீதிபதி நோர்ஷஸ்வானி இஷாக் முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தாம் குற்றமற்றவர்கள் என்று கூறி விசாரணை கோரினர்.

குற்றச்சாட்டின்படி, 24 வயதான முஹமட் அஸ்லி ஜமாலுடினுக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படும் என்று பயத்தை ஏற்படுத்தி, அவரை மிரட்டி, அவரிடமிருந்து RM14,000 பெற்றனர் எனக் கூறப்பட்டது.

வழக்கை மார்ச் 3-ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here