தாவாவிலுள்ள செம்பனைத் தோட்டத்தில், கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ஈ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் நான்கு மூத்த அதிகாரிகள் உட்பட 8 போலீஸ்காரர்களின் விளக்கமறியல் இன்று முதல் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாவாவ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் அவர்கள் அனைவரும் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு இன்று முடிவடைந்ததையடுத்து, இன்னும் ஏழு நாட்களுக்கு அந்த உத்தரவை நீட்டித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி Dzul Elmy Yunus அனுமதிவழங்கினார் .
இதற்கிடையில், கொலை செய்யப்பட்டவரின் மனைவிக்கு எதிராக குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும், இந்த கொலை பொறாமையின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் சபா மாநில போலீஸ் கமிஷனர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறினார்.
நூரிமா ஜூலி, 33, என்ற இறந்தவரின் மனைவி, கடந்த ஜனவரி 13 அன்று இரவு 7.30 முதல் 9 மணிக்கு இடைப்பட்ட வேளையில், Jalan Anjur Juara, Jalan Apas, Batu 5க்கு அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் நர்மன் பகரது, 61, என்பவரை கொலைசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.