ஈப்போ: வியாழன் (பிப் 2) அதிகாலை வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (தெற்கே செல்லும்) கிலோமீட்டர் 352.2 இல் மற்றொரு லோரி மற்றும் டிரெய்லர் மோதிய விபத்தில் லோரி டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிகாலை 5.13 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து, பிடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
29 வயதான லோரி டிரைவர், ஐந்து டன் எடையுள்ள வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது. மற்ற லோரி மற்றும் டிரெய்லரின் டிரைவர்கள் காயமின்றி தப்பினர் என்று அவர் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். காலை 6.45 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும், ஓட்டுநரின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.