பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி, நம்பவைத்து ஏமாற்றியதில் சிரம்பானைச் சேர்ந்த 56 வயது பெண் RM141,000 இழந்துள்ளதாக, நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர், துணை ஆணையர் டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முஹமட் யூசூப் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த ஜனவரி 20 அன்று, ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து குறித்த பெண் செய்ததாகக் கூறப்படும் கோரிக்கையைப் பற்றி வினவுவதாக குறி ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது.
“பாதிக்கப்பட்டவர் தான் எந்த கோரிக்கையையும் செய்யவில்லை என்று மறுத்தார், பின்னர் அந்த அழைப்பு “ஒரு காவல்துறை அதிகாரிக்கு” மாற்றப்பட்டது என்றும், கோரிக்கையை அவர் உரிமைகோராததால் அவருக்கு எதிராக புகார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அந்த வழக்கைத் தீர்க்க விரும்பினால், துணை அரசு வழக்கறிஞரிடம் பேசுமாறு குறித்த காவல்துறை என அறிமுகமான நபர் கூறினார்” என்று அவர் கூறினார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இந்த விஷயத்தை ரகசியமாக வைக்குமாறும், புதிய ஏடிஎம் கார்டை பெற்றுக்கொள்ளுமாறும், வங்கி விவரங்களை வழங்குமாறும் கூறப்பட்டதாக டிசிபி அஹ்மட் ஜாஃபிர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது EPF சேமிப்பிலிருந்து RM130,000 திரும்பப் பெற்று, தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். “இருப்பினும், பிப்ரவரி 4 அன்று, அவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து RM141,000 எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தார்.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல்துறையில் புகார் அளித்தார், என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.