பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாக்., அதிபராக பதவி வகித்துவந்தார். இந்தியா – பாக்., இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் காரணியாக இருந்தார். 2016 முதல் ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாயில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முஷாரப் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று(பிப்.,05) அவர் காலமானார்.

இந்தியாவில் பிறந்தவர்

நாடு பிரிவினைக்கு முன்னர், இந்திய தலைநகர் டில்லியில் பிறந்தவர் முஷாரப். பிரிவினைக்கு பிறகு, குடும்பத்தினருடன் கராச்சிக்கு அவர் இடம்பெயர்ந்தார்.

துபாயில் தஞ்சம்

முஷாரப், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவர் மீது, 2007ல் பாக்., அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்த வழக்கும் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக, 2016ல் துபாய் சென்றவர் அதன் பின் பாக்., திரும்பவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here