அஸாம் பாக்கிக்கு எதிராக கைகோர்க்கும் அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுகள்: ஏப்ரல் 25-இல் மாபெரும் பேரணி!

கோலாலம்பூர்:

லேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராக, வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘தங்காப் அஸாம் பாக்கி’ பேரணியில் DAP மற்றும் MCA ஆகிய அரசியல் எதிரெதிர் துருவங்களின் இளைஞர் பிரிவுகள் ஒன்றிணைந்து பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளன.

நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமைத்துவத்தில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சுயேச்சையாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அவ்விரு பிரிவுகளும் தெரிவித்துள்ள நிலையில், இது மடானி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என DAP இளைஞர் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

பங்குகளை வைத்திருந்தது தொடர்பான பழைய புகார்களை அஸாம் பாக்கி முற்றாக மறுத்துள்ள போதிலும், பொதுமக்களின் நலன் கருதி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், ஆணையத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நிலைநிறுத்தியுள்ளது இப்பேரணியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here