கோலாலம்பூரிலுள்ள இரவு விடுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருள் விநியோகம் செய்ததாக நம்பப்படும் ஆறு அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) தெரிவித்துள்ளது.
குறித்த சோதனைகளில் மொத்தம் 38 பேர் சோதனை செய்யப்பட்ட்தாகவும் அதில் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக NCID இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 7) அதன் முகநூல் பக்கத்தின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குடியேற்ற குற்றங்களுக்காக குறித்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“மெத்தம்பேட்டமைன்கள் கலந்ததாக சந்தேகிக்கப்படும் 1,620 மில்லி பானம், 2,069 கிராம் எடையுள்ள 133 MDMA பாக்கெட்டுகள் மற்றும் 31 கிராம் மெத்தம்பேட்டமைன் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டையும் என்பவற்றை போலீசார் கைப்பற்றினர்.
“மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு RM43,750” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 012-208 7222 என்ற NCIDயின் ஹாட்லைன் மூலம் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அது வலியுறுத்தியது.