துருக்கி-சிரியா இடையே உள்ள காசியான்டெப் நகரில் இன்று அதிகாலையில் 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் 140க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியைத் தொடர்ந்து, சிரியா, லெபனானிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 90 விநாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் 1300 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதானா,மலாத்யா ஆகிய துருக்கிய நகரங்களில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப்பணிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டுனர். இந்நிலையில் மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே 4 மணியளவில் மீண்டும் 7.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக 6:30 மணியளவில் மீண்டும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.