6 வயது மகளை வன்கொடுமை செய்த பள்ளி பாதுகாவலர்; 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்!

ஜோகூர் பாரு:

தனது ஆறு வயது மகளை பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட 13 கொடூரமான குற்றங்களைச் செய்ததை 43 வயது பள்ளி பாதுகாவலர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முகமட் ஜமிர் சுஹைமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17 வரை, கம்போங் கெம்பாஸ் பாருவில் உள்ள ஒரு குடிசை வீட்டில் இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளன.

சிறுவர் பாலியல் குற்றச் சட்டம் 2017-ன் கீழ் 4 குற்றச்சாட்டுகள். அதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முன்னால் பாலியல் செயல்களைச் செய்ததாக 4 குற்றச்சாட்டுகள், இயற்கைக்கு மாறான புணர்ச்சி: தண்டனைச் சட்டப்பிரிவு 377C-ன் கீழ் 2 குற்றச்சாட்டுகள், பாலியல் வீடியோ எடுத்தல்: சிறுமியை வைத்து பாலியல் வீடியோ எடுத்ததற்காக 2 குற்றச்சாட்டுகள், கற்பழிப்பு: தண்டனைச் சட்டப்பிரிவு 376(3)-ன் கீழ் 1 குற்றச்சாட்டு என்பன அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கசையடிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதால், மார்ச் 4-ஆம் தேதி அவருக்குத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.

இதே விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் (46 வயது), அந்தப் பாதுகாவலரின் காதலியுமான பெண் மீது மற்றொரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில் தனது பொறுப்பில் இருந்த சிறுமியை ஆபத்தான சூழலில் விட்டு, காயம் ஏற்படக் காரணமாக இருந்ததாக (Child Act 2001) இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். நீதிமன்றம் இவருக்கு RM8,000 பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் மலேசிய சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரு தந்தையே தனது பிஞ்சு மகளுக்கு இழைத்த இந்த அநீதி கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here