இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆடவர் பலி

ஜாலான் கோலா கங்சார்-கெரிக் என்ற இடத்திலுள்ள Tasik Raban உணவகத்திற்கு முன்னால் நேற்று இரண்டு கார்கள் மோதிய விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் எங் ஜின் சின் (45) என அடையாளம் காணப்பட்டார் என்றும் அவர் புரோத்தோன் வீரா காரின் முன்பக்க பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தார் என்றும் Lenggong தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், Farizul Anuar Razali கூறினார்.

புரோத்தோன் வீரா கார் மற்றும் பல்நோக்கு வாகன வகை தோயோத்தா அவான்சா ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நண்பகல் 1.36 மணியளவில் தகவல் கிடைத்தது என்றும், உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​ஒரு புரோத்தோன் வீரா அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த வைத்திய அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் “51 மற்றும் 44 வயதுடைய இரண்டு கார் ஓட்டுநர்களும் லேசான காயம் அடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here