வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்த பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், ராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்த ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.