நேற்றிரவு கோலா சிலாங்கூரில் உள்ள பெஸ்தாரி ஜெயா, ராந்தாவ் பாஞ்ஜாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் 1,335 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத நீர் விநியோகத்தடை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள 370 பகுதிகள்; கோம்பாக்கின் 279 பகுதிகள்; உலு சிலாங்கூரின் 28 பகுதிகள்; கிள்ளான் மற்றும் ஷா ஆலாமிலுள்ள 189 இடங்கள்; கோலா லங்காட்டின் 3 இடங்கள் ; கோலாலம்பூரிலுள்ள 186 பகுதிகள் மற்றும் கோலா சிலாங்கூரிலுள்ள 280 பகுதிகள் என்பனவும் அடங்கும்” என்று ஆயிர் சிலாங்கூர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தது.