பினாங்கிலுள்ள 30 பன்றி பண்ணைகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு

பினாங்கு மாநிலத்தில் உள்ள 30 வணிகப் பன்றிப் பண்ணைகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் (ASF) பாதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு கால்நடை சேவைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அவை அனைத்தும் செபெராங் பிறை மாவட்டத்திலுள்ளன என்றும், குறித்த மாவட்டத்தின் தென் பகுதியில் 19 பண்ணைகள், மத்தியில் 2 பண்ணைகள், வடக்கில் 6 பண்ணைகள் மற்றும் தென்மேற்கில் 3 பண்ணைகளும் அடங்கும். இதனால் பினாங்கு மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மொத்தம் 68,659 பன்றிகளின் பாதிக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை (பிப் 14), பினாங்கு கால்நடை சேவைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ASF இன் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வறிக்கையில் அது மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here