நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழப்பு

பத்து பாகாட்,

நேற்று இரவு வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 97.6ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மாண்டார்.
இந்த விபத்து இரவு 7.45 மணியளவில் யோங் பேங் அருகே சாலையின் வட திசை அவசர வழிப்பாதையில் நிகழ்ந்ததாக பத்து பாகாட் ஓசிபிடி ஷாருல்அனுவார் தெரிவித்தார்.

வடக்கு திசையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயது இளைஞன் பழுதடைந்ததால் அவசர வழிப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியை மோதினார். இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் லாரி ஓட்டுனர் காயமின்றி தப்பினார்.

இதடையடுத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் தமது அறிக்கையில் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here