சாலையைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாது மரணம்-மகன் காயம்

கடந்த செவ்வாய்கிழமை, ஜாலான் PJS2/2, பெட்டாலிங் ஜெயா பள்ளியின் அருகே நடந்த விபத்தில் 37 வயது பெண்மணி உயிரிழந்தார்.

மாலை 5.30 மணியளவில், குறித்த பெண்ணும் அவரது மகனும் சாலையை கடக்கும்போது, ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதாகவும், அதனால் அந்தப்பெண் தலையில் பலத்த காயமடைந்து, யுனிவர்சிட்டி மலாயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் தெரிவித்தார்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரின் 10 வயது மகனுக்கு உதட்டில் லேசான காயம் ஏற்பட்டது என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here