கம்போங் பாண்டான் ரவுண்டானாவில் ஆடவர் திடீரென்று கார் மீது ஏறியதால் பயங்கர தருணத்தை எதிர்கொண்ட பெண்

கம்போங் பாண்டான் சுற்று பாதையில் (ரவுண்டானாவில்) ஒரு ஆடவர் வாகனத்தின் மீது தாவி குதித்து அமர்ந்ததால் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் பயங்கரமான தருணத்தை அனுபவித்தார். அவர் இந்த சம்பவத்தை பதிவு செய்து, @tzliana_11  தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 76 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவினை வெளியிட்டார்.

ஒரு நபர் அவரது காரின் முன்பக்கம் மீது ஏறி வாகனத்தின் உள்ளே எட்டிப்பார்ப்பதை வீடியோ காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர் அலறுவதையும், “என்னை மன்னிக்கவும்” என்று கூச்சலிடுவதையும், அருகில் இருப்பவர்களிடமிருந்து உதவிக்காக வெறித்தனமாக ஹன் அடிப்பதையும் கேட்க முடிந்தது. சிறிது நேரம் கழித்து, ஒரு ஆடவர் அவளுக்கு உதவிக்கு வருவதையும், குற்றவாளியை சாலையின் ஓரமாக இழுத்துச் செல்வதையும் காணலாம். அவரது வீடியோவுடன் வந்த தலைப்பில், அந்த நபர் முதலில் தனது காரின் மீது குதித்து, அவரைத் தாக்கியதாகக் கூறினார். பல வழிப்போக்கர்கள் தனக்கு இந்த சோதனையின் போது உதவி செய்யாததால் தனது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.

அதிர்ஷ்டவசமாக யாரோ ஒருவர் உதவிக்கு வந்தார், ஆனால் நான் இன்னும் ஏமாற்றமடைகிறேன்… என்னுடைய வழியே பல கார்கள் சென்றன. யாரும் நிறுத்தவில்லை அல்லது அவரை தடுக்க உதவவில்லை. கடவுளுக்கு நன்றி, நான் எனது காரின் எல்லா கதவுகளையும் பூட்டிவிட்டேன். இதற்குப் பிறகு,  தனியாக வாகனம் ஓட்டினால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசிலும் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களில் பலர் பாதிக்கப்பட்டவரின் காரில் இருந்து குற்றவாளியை இழுக்க உதவிய நல்ல சமாரியனைப் பாராட்டினர்.

Instagram பயனர் @wan_muhd_danish கருத்துரைத்தார்: “Terbaik brother tu, thumbs up. (அந்த சகோதரர் சிறந்தவர்…நன்றி)” மற்றொரு பயனர் @adikfoods கூறுகையில்: “சிவப்பு சட்டை அணிந்தவருக்கு நன்றி. இது பயமாக இருக்கிறது.. (செயல்) மற்ற நாடுகளில் நிறைய நடக்கிறது, பணத்திற்காக விபத்தில் சிக்குவது போல் நடிக்கிறார்கள். அதிகாரிகள் இவற்றை ஒழிப்பார்கள் என்று நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here