பேரரசர் அபுதாபிக்கு ஏழு நாள் சிறப்புப் பயணம்

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஏழு நாள் சிறப்புப் பயணமாக ஐக்கிய அரபு சிற்றரசின் அபுதாபிக்கு சென்றுள்ளதாக, இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளத.

மாமன்னர் மற்றும் அவரது தூதுக்குழுவை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (மலேசியா நேரப்படி இரவு 7.15 மணிக்கு) அபுதாபி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்ததாக இஸ்தானா நெகாரா தனது அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

அபுதாபி சென்றடைந்த மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவை, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் ஹமத் பின் சயீத் அல்-நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபதில் ஷம்சுதீன் ஆகியோர் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here