உணவு நஞ்சானதால் சுங்கை பட்டாணி தொடக்கப் பள்ளி மாணவர்கள் 65 பேருக்கு சிகிச்சை!

சுங்கை பட்டாணி:

S.K பண்டார் புத்திரி ஜெயா தொடக்கப் பள்ளியின் அறுபத்தைந்து மாணவர்கள், இன்று திங்கள்கிழமை (மே 20) காலை அங்குள்ள பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில் உணவருந்திய பிறகு, உணவு விஷமனதால் சிகிச்சையளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பள்ளி சிற்றுண்டிசாலையில் உணவருந்திய நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள்,வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாக பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் (PIBG) தலைவர் சுபீர் உத்மான் கூறினார்.

“பாதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு இடைவேளையின் போது “குவே தியோ சூப்பை” சாப்பிட்டதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு உணவு விஷமானதால் ஏற்படும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாகவும் அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உடனே அவசர உதவியை நாடியதாகவும், உடனே அங்கு விரைந்த
கோல முடா மாவட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பள்ளி ஏற்கனவே தயார் செய்த ஒரு சிறப்பு வகுப்பறையில் சிகிச்சையளித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 7 மாணவர்களுக்கு சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துமனையில் மஞ்சள் மண்ட பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும்,
அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக பள்ளிச் சிற்றுண்டிச்சாலை இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here