ஜோகூரில் அவசர நிலை பிரகடனம் தேவையில்லை: பிரதமர் கருத்து

செகாமட்: ஜோகூரில் வானிலை சீராகி வருவதால், பேரிடர் அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டாம் என்ற முடிவை அரசாங்கம் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். அவசர நிலையை அறிவிக்காத அரசாங்கத்தின் முடிவு, மழை குறையத் தொடங்கியதாலும், பல இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியதாலும் ஆகும்.

சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது என்றாலும், பேரிடர் அவசரநிலை (அறிவிக்கப்பட) இப்போதைக்கு தேவையில்லை  என்று அவர் Sekolah Jenis Kebangsaan (Cina) கம்போங் தெங்காவில் உள்ள நிவாரண மையத்திற்குச் சென்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜோகூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் சமீபத்திய நிலை குறித்தும், மாநிலத்தில் அதிகரித்து வரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்றும் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜோகூரில் வெள்ளப்பெருக்கு அவசரநிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here