கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷிய மருத்துவ விஞ்ஞானி மர்ம மரணம்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அஸ்டராஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு, பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் கொரோனா தடுப்பில் மிகப்பெரிய பங்காற்றன.

அதிலும், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக நல்ல பயனை தந்தது. ரஷிய அரசு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவை சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 18 பேர் கொண்ட அந்த அறிவியல் விஞ்ஞானிகள் குழுவில் அண்டிரு பொட்டிக்வ் (வயது 47) என்ற விஞ்ஞானி இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த குழுவில் இடம்பெற்றிருந்த அறிவியல் விஞ்ஞானி அண்டிரு இன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்தார். பெல்ட்டால் கழுத்தை நெரித்து அண்டிரு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அண்டிருவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாக்குவாதத்தின்போது அண்டிருவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக 29 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியாளரான அண்டிரு கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக, அவருடன் சேர்ந்து மொத்தம் 18 அறிவியல் விஞ்ஞானிகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here