ஜோகூரில் வெள்ளம் காரணமாக நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜோகூரில் வெள்ளத்தால் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மலாக்காவில் சிறிது குறைந்துள்ளதுடன் பகாங்கில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அங்கு வெள்ள நிலைமை மாறாமல் உள்ளது என்று பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

ஜோகூரில், வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,218 ஆக உயர்ந்துள்ளது, இது நேற்று இரவு 8 மணியளவில் 43,856 பேராக இருந்தது, இதுவரை ஜோகூரின் ஆறு மாவட்டங்களில் மொத்தம் 174 நிவாரண மையங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன.

அங்கு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக பத்து பகாட் உள்ளது, அங்கு 38,134 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து முவாரில் 4,057 பேரும் மற்றும் தாங்காக்கில் 2,424 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு இன்று காலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங்கில், சமூக நலத் துறையின் InfoBencana போர்ட்டல் தரவுகளின் அடிப்படையில், அங்கு வெள்ள நிலைமை மாறாமல், இன்னமும் 1,804 பேர் அங்குள்ள 12 மையங்களில் தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

மாவட்டத்தில் உள்ள கெராடோங் ஆறு இன்னும் அபாய அளவைத் தாண்டியுள்ளது, ஆனால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது என்று publicinfobanjir.water.gov.my என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

மலாக்காவில், ஜாசினில் இருந்து வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 குடும்பங்களில் இருந்து 448 ஆகக் குறைந்துள்ளது, நேற்றிரவு 126 குடும்பங்களில் இருந்து 484 பேராக இருந்தது குறிப்பிடத்த்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here