முஹிடின் மீது மீண்டும் திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்படும்; பைசல் தகவல்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மீது திங்கள்கிழமை மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆதரவாளர்களிடம் பேசிய பைசல், ஷா ஆலம் நீதிமன்றத்தில் முஹிடின் மீது குற்றம் சாட்டப்படும் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

இதற்கிடையில், முஹிடின் மீதான குற்றச்சாட்டுகள் ஆறு மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் பெரிகாத்தான் நேஷனலின் ஆதரவை மட்டுமே அதிகரிக்கும் என்று பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் நம்பிக்கை தெரிவித்தார்.

பெரிகாத்தான் நேஷனல் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் செய்தியாளர்களிடம் மீண்டும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here