மசூதிகளில் அனுமதி பெறாமல் உரை நிகழ்த்த அனுமதிக்கும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்

 ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் மசூதி மற்றும் சுராவ் ஆகிய இடங்களில்  உரை  நிகழ்த்துபவர்கள் மாநில சமய அதிகாரிகளால் அனுமதி பெற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பெர்னாமாவின் கூற்றுபடி, சுல்தான் இப்ராஹிம், அங்கீகாரம் பெறாத பேச்சாளர்கள் தங்கள் மசூதிகள் அல்லது சூராக்களில் பேச்சுக்களை அனுமதிக்கும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

ஜனவரி மாதம்,ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், ஜோகூரில் உள்ள அனைத்து மசூதிகளும், சூராக்களும் அரசியல் பேச்சுகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஜோகூர் இஸ்லாமிய சமயப் பேரவைத் தலைவரான துங்கு இஸ்மாயில், எந்தவொரு தனிநபரும் அல்லது அரசியல்வாதியும் மசூதிகள் மற்றும் சூராக்களைப் பயன்படுத்தி அரசியல் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதையும் தடை செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here