கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்- மனைவியின் கல்லறையைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்

பெர்லிஸின் சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஒரு வீட்டில் மார்ச் 5 ஆம் தேதி தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்றதாக கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு போலீஸ்காரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

27 வயதான நிசர்மான் ஹாசிம், மாஜிஸ்திரேட் அனா ரொசானா நோர் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அமைதியாக இருந்தார். உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் வழக்கு இருப்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

நீதிமன்ற அறையிலிருந்து வெளியே வருவதற்கு முன், நிசர்மான் கூறினார்: “நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், என் மனைவியின் கல்லறைக்குச் செல்ல விரும்புகிறேன்.”

தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் சஃப்சுபர்னிஸ்யா சலே (26) என்பவரைக் கொன்றதாக நிசர்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது. லான்ஸ் கார்போரல் சார்பில் யாருன்ம் ஆஜராகாத  நிலையில், அரசு வழக்குத் தொடர இயக்குநர் நோர்டின் இஸ்மாயில் வழக்குத் தொடர்ந்தார்.

மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்த நிசர்மனை ஒரு மாதத்திற்கு மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோர்டினின் கோரிக்கைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த மனநல அறிக்கைக்காக காத்திருக்கும் வேளையில், வழக்கை குறிப்பிடுவதற்கு அனா ரோசானா ஏப்ரல் 14 ஆம் தேதியை அமைத்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கங்கார் காவல்துறைத் தலைவர் யுஷரிபுதீன் யூசோப், ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த புகாரின் பேரில் ஒரு போலீஸ்காரர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here