ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,381 பேராக குறைந்தது

ஜோகூரில் நேற்றிரவு நிவாரண மையங்களில் தங்கியிருந்த 28,008 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 8 மணி நிலவரப்படி, 26,381 பேர் இன்னமும் அங்குள்ள 95 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

7,418 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் பத்து பகாட் ( 7,404 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 26,337 பேர் ) மற்றும் சிகாமாட் (14 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர்) ஆகிய மாவட்டங்களிலுள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு (JPBN) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜோகூரின் 10 மாவட்டங்களிலும் வானிலை வெயிலாக இருக்கும் என்றும், அங்குள்ள எந்த ஆறுகளும் அபாய கட்டத்தில் இல்லை என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பத்து பகாட்டில் உள்ள ஐந்து சாலைகள் வெள்ளம் காரணமாக இலகுரக வாகனங்களுக்கு இன்னும் மூடப்பட்டுள்ளன, மேலும் கனரக வாகனங்கள் மட்டுமே குறித்த சாலைகள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here