நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் டிக் டாக் செயலிக்கு தடை

நியூ­சி­லாந்து இணைய பாது­காப்­புக் கருதி, தனது நாடா­ளு­மன்ற கட்­ட­மைப்­பில் உள்ள சாத­னங்­களில் டிக் டாக்­ செயலிக்கு தடை விதித்­துள்­ளது.

டிக் டாக் பய­னா­ளர்­க­ளின் தக­வல்­கள் மற்றும் அவர்களின் தங்குமி­டம் போன்றவை சீன அர­சாங்­கத்­தின் பிடி­யில் சிக்­கி­வி­டக்­கூ­டும் என்று, உல­கின் பல நாடு­கள் கவ­லை­யு­றும் நிலை­யில் நியூ­சி­லாந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நியூ­சி­லாந்து நாடா­ளு­மன்ற கட்­ட­மைப்­பில் உள்ள தொர்­பு­ சாத­னங்­கள் அனைத்­தி­லும் டிக் டாக் செயலி இம்­மாத முடி­வில் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை நியூ­சி­லாந்­தில் உள்ள இணைய பாது­காப்பு நிபு­ணர்­க­ளின் ஆலோசனை, அர­சாங்க கலந்துரையாடல், மற்ற நாடு­க­ளு­ட­னான கருத்­துப் பரிமாற்­றம் ஆகி­ய­வற்­றின் முடி­வில் டிக் டாக்கை தடை செய்­யும் முடிவு எடுக்கப்பட்­ட­தாக நியூசிலாந்து நாடா­ளு­மன்ற தலைமை செயல் அதி­காரி ரஃபயேல் கொன்சா­லஸ் மொன்­டேரோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here