அமெரிக்காவில் டிக் டாக்கை ஆதரித்து ஆர்ப்பாட்டம்

வாஷிங்­டன்: சீன நிறு­வ­னம் உரு­வாக்­கிய டிக்­டாக் சமூக ஊட­கச் செய­லியை அமெ­ரிக்­கா­வில் தடை செய்­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், அதற்கு எதி­ரா­கக் குரல் கொடுக்­கும் பலர் ஆர்ப்­பாட்­டத்­தில் இறங்­கி­யுள்­ள­னர்.

‘கொன்­டென்ட் கிரேய்ட்­டர்ஸ்’ எனப்­படும் டிக்­ டாக்­கில் காணொ­ளி­க­ளை­யும் படங்­க­ளை­யும் அடிக்­கடி பதி­வேற்­றம் செய்­யும் பலர் அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வாஷிங்­ட­னில் உள்ள நாடா­ளு­மன்­றக் கட்­டட வளா­கத்­தில் ஆர்ப்­பாட்­டம் செய்தனர்.

டிக் ­டாக்கை நடத்­தும் நிறு­வ­ன­மான பைட்­டான்ஸ், அச்­செ­ய­லி­யைப் பயன்படுத்து­வோ­ரின் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைச் சேக­ரித்து அவற்றை சீன அரசாங்­கத்­துக்கு வழங்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது. அதைத் தொடர்ந்து டிக்­டாக்கை அமெ­ரிக்­கா­வில் தடை செய்­வது குறித்து அந்­நாட்டு அர­சாங்­கம் ஆலோ­சித்து வரு­கிறது.

எனி­னும், பய­னீட்­டார்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள் தவ­றா­கப் பயன்படுத்தப்படும் அபா­யம் டிக்­டாக்­கில் மட்­டும் இல்லை என்­பது ஆர்ப்பாட்டக்கா­ரர்­க­ளின் வாதம். அதி­கா­ரி­கள் பொது­வா­கவே தனிப்­பட்ட விவரங்­க­ளைப் பாது­காப்­ப­தில் கூடு­தல் கவ­னம் செலுத்­த­வேண்­டும்; அவர்­கள் பய­னீட்­டா­ளர்­க­ளைப் பாதிக்­கும் வகை­யில் நடந்­து­கொள்­ளக்­கூடாது என்று ஆர்ப்பாட்­டக்­கா­ரர்­கள் சொல்கின்றனர். டிக்­ டாக்­கால் தங்­க­ளின் வர்த்­த­கம் பெரி­தும் பல­ன­டைந்­திருப்பதாகவும் சிலர் கூறி வரு­கின்­ற­னர்.

இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் நேற்று டிக்­டாக் தலைமை நிர்­வாக அதி­காரி ஷுவோ ஸி சியூ­வைக் கடு­மை­யான கேள்­வி­கள் கேட்க அமெ­ரிக்க அர­சி­யல் தலை­வர்­கள் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். அப்போது டிக்­டாக் பய­னீட்­டா­ளர்­க­ளின் தனிப்பட்ட விவரங்கள் சீன அர­சாங்­கத்­து­டன் பகி­ரப்­படாது என்று திரு சியூ வாக்கு­றுதி தரு­வார் என்­றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here