19 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானம், சிகரெட் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்

இந்த வருடத்தில் இதுவரை 19 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களை மார்ச் 21 நிலவரப்படி  போலீசார் கைப்பற்றியுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 21 சோதனைகளில் 119 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செயலாளர் நூர்சியா சாதுதீன் தெரிவித்தார்.

மொத்தம் 351,680 சிகரெட் குச்சிகள் மற்றும் 290,008 கேன்கள் மற்றும் 2,200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 11 லோரிகள், நான்கு வேன்கள் உட்பட 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மொத்தம் RM18,175,654 மதிப்புள்ள சமையல் எண்ணெய் மற்றும் பெட்ரோல் போன்ற மானிய விலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நூர்சியா கூறினார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 76 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here