ஜோகூர் பத்து பஹாட்டில் இயங்கி வந்த கடைசி இரண்டு தற்காலிக மையங்களும் மூடப்பட்டன

பத்து பஹாட்: ஜோகூரில் வெள்ளம் முழுவதுமாக குறைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடைசியாக மீதமுள்ள இரண்டு தற்காலிக வெளியேற்ற மையங்கள் (PPS) இன்று நண்பகல் மூடப்பட்டன.

22 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் தங்கியிருந்த Dewan Orang Rami Yong Peng பொது மண்டபம் மற்றும் 15 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் தங்கியிருந்த  SK Sri Medan National Schoolயில் உள்ள பிபிஎஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட இரண்டு பிபிஎஸ் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ‘banjir termenung ’ (தேங்கி நின்ற வெள்ளம்) முழுவதுமாக வடிந்ததைத் தொடர்ந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.

இதுவரை, பெக்கோக் அணையில் உள்ள சுங்கை பெக்கோக் 18.92 மீட்டர் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது. அதே நேரத்தில் இரண்டு ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன. அதாவது லாடாங் சாவில் உள்ள சுங்கை லெனிக் (5.07 மீ) மற்றும் செம்ப்ராங் அணையில் சுங்கை செம்ப்ராங் நதி (10.66 மீ). மதியம் வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வானிலை நன்றாக இருந்தது.

பிப்ரவரி 28 முதல் ஜோகூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 10 மாவட்டங்களில் 85,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் வெள்ளம் 2006 இல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவைப் போலவே மிக மோசமான ஒன்றாக விவரிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here