2021 முதல் 9,938 சட்டவிரோத குடியேறிகள் சபா குடிநுழைவுத் துறையால் நாடு கடத்தப்பட்டனர்

2021 ஆம் ஆண்டு முதல் சபா மாநிலத்தில் உள்ள நான்கு குடியேற்ற தடுப்பு முகாம்களிலிருந்து மொத்தம் 9,938 சட்டவிரோத குடியேறிகள் சபா குடிநுழைவுத் துறையால் நாடு கடத்தப்பட்டதாக, உள்துறை துணை அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

மொத்த எண்ணிக்கையில், 2021-ஆம் ஆண்டில் 2,497, இந்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மார்ச் 27 வரை 5,450 பேரும், 2022-ஆம் ஆண்டில் 1,991 சட்டவிரோத குடியேறிகளும் அந்த எண்ணிக்கையில் அடங்கியுள்ளது.

“கைதிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய தூதரகங்களுடன் வழக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் கைதிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை KDN முடுக்கிவிட்டுள்ளது” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here