பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேற காரணம் என்ன…! கங்கனா சர்ச்சை பதிவு

தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தி திரையுலகில் தனக்கு பட வாய்ப்பு கிடைக்க விடாமல் ஒரு கும்பல் சதி செய்ததாக புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், ” இந்தி திரையுலகில் என்னை ஒரு மூலையில் தள்ளி விட முயற்சி செய்தனர். எனக்கு பட வாய்ப்புகள் வராமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்தது.

இவர்களுடன் அரசியல் விளையாட்டை ஆட என்னால் முடியாது என்று தோன்றியது. இதனால் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க நினைத்தேன். அதன் பிறகு இசை ஆல்பத்தில் பணியாற்ற அமெரிக்கா சென்றேன்.

அங்கு புதிய உலகில் அடியெடித்து வைத்தேன். ஹாலிவுட்டில் பே வாட்ச், கேண்டிகோ போன்றவற்றில் நடித்தேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இந்தி திரையுலகில் சிலர் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் இந்தி படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்” என்றார். பிரியங்கா சோப்ரா குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து வெளியேறியதற்கு பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், ஷாருக்கான் உடனான பிரியங்கா சோப்ராவின் நட்பின் காரணமாக அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற கரண் ஜோஹர் நினைத்ததாகவும் பாலிவுட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலுக்கு கரண் ஜோஹர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here