நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் சேவை – KTMB நிறுவனம்

இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து KL சென்ட்ரலில் இருந்து கிளாந்தானில் உள்ள தும்பட் வரை கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கு சிறப்பு விரைவு ரயில் சேவையை KTMB நிறுவனம் வழங்குகிறது.

ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் KL சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் தும்பாட் வரை செல்லும் என்று, அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவையில் படுக்கைப் பெட்டிகள், பிரீமியர் மற்றும் சிறந்த இருக்கை பெட்டிகள் மற்றும் பஃபே கோச் ஆகியவற்றைக் கொண்ட மொத்தம் 1,864 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

“ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும், இது ஒரு வழி பயணத்திற்கான விலை RM55 முதல் RM83 வரை இருக்கும்,”என்று KTMB நிறுவனம் கூறியது.

KTMB செயலி அல்லது அதன் இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று அது மேலும் அறிவுறுத்தியது.

இந்த சிறப்பு ரயில் பண்டார் தாசிக் செலாத்தான், கெமாஸ், மெந்தக்காப், ஜெரான்துட், குவா முசாங், கோலாக் கிராய், பாசீர் மாஸ் மற்றும் தும்பாட் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்களில் நிற்கும் என்றும் KTMB மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here