பினாங்கு தீவு மாநகர் நகர் மன்றத்தின் புதிய மேயராக டத்தோ ஏ.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மலேசிய வரலாற்றில் மேயர் பதவிக்கு ஒரு இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது பெருமைக்குரியது.
நடப்பு மேயராக இருக்கும் டத்தோ இயூ துங் சியாங் பதிவு விளக்குவதைத் தொடர்ந்து, வரும் மே 5 முதல் 60 வயதான டத்தோ ஏ.ராஜேந்திரன் இந்தப் பதவியை பொறுப்பேற்கிறார்.
பொறியியலாளரான ராஜேந்திரன், ஜனவரி 2022 இல் பினாங்கு தீவு மாநகர் மன்றத்தின் (MBPP) செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 1985 இல் மாநகர மன்றத்தில் இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அவர் பணியாற்றியுள்ளார்.
இந்த நியமனத்தை மாநில உள்ளாட்சிக் குழுத் தலைவர் ஜக்தீப் சிங் தியோ இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 1) அறிவித்தார்.
இந்த நியமனம் குறித்து கருத்துரைத்த ராஜேந்திரன், முதல்வர் சோவ் கோன் யோவ் மற்றும் ஜக்தீப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
” நான் இந்த பதவியிலுள்ள சவால்களை அறிந்திருக்கிறேன், கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்,” என்று அவர் மேலும் கூறினார்.









