சிங்கப்பூரில் உமிழ்நீரைக் கொண்டு போதைப்பொருள் பரிசோதனை செய்யும் புதிய கருவி அறிமுகம்

உமிழ்நீரைக் கொண்டு ஒரு­வ­ரின் உட­லில் இருக்­கக்­கூ­டிய போதைப்­பொ­ரு­ளின் அள­வைக் காட்­டும் புதிய கருவி சிங்­கப்­பூ­ரில் பயன்­படுத்­தப்­ப­டுகிறது. ஒருவரின் உமிழ்நீரைக் கொண்டு அவ­ரின் உட­லில் போதைப்­பொ­ருள் கலந்­தி­ருக்­கி­றதா என்­ப­தை இக்கருவி காண்­பிக்­கும்.

சுமார் 10 நிமிடங்களில் முடிவுகளைத் தரக்கூடிய மருந்துகளுக்கான புதிய உமிழ்நீர் சோதனைக் கருவி சிங்கப்பூர் – சோதனைச் சாவடிகள் மற்றும் சாலைத் தடைகளில் பயன்படுகிறது.

சிங்கப்பூர் உள்துறை துணை அமைச்சர் முஹமட் பைசல் இப்ராஹிம் கூறுகையில், “சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியேற்றவாசிகள் வெளிநாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க, கடந்த ஜனவரி முதல் சோதனைச் சாவடிகளில் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

போதைப்பொருள் பயன்பாடு உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சிங்கப்பூரை போதைப்பொருள் இல்லாததாக வைத்திருப்பதற்கு சவால்களை ஏற்படுத்துவதாகவும் கூறிய அவர், “இந்தக் கருவிகள்… இலகுவாகவும் கச்சிதமாகவும் இருக்கின்றன. சோதனைச் சாவடிகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கண்டறிய அவர்கள் மிகவும் திறமையான வழியை வழங்குகின்றன, ” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here