ரவாங்:
இங்குள்ள பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ், பெர்சியாரான் ஆங்குன் சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒன்பது ஆணிகள் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றுக்காலை 8.28 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தனது தரப்பில் அறிக்கை கிடைத்தது என்று, கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் நூர் அரிஃபின் முகமட் நசீர் கூறினார்.
“விசாரணையின் முடிவில், காலை 7 மணியளவில் புகார்தாரர், 36 வயதான உள்ளூர் நபர், சம்பந்தப்பட்ட பகுதியில் ஜாக்கிங் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.
“அவர் சாலையோராத்தில் புதைத்திருந்த ஒரு ஆணியை மிதித்தபின், சாலையின் இரு திசைகளிலும் ஒன்பது ஆணிகள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டார்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.




















