மலேசியாவில் கடலுக்கடியில் மேற்கொள்ளப்படும் கேபிள் கட்டுமானங்களில் பெரும்பாலானவை அரசு நிதியில் ஈடுபடவில்லை, மாறாக தனியார் துறையினர் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்துகிறார்கள் என்று, தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர், தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேபிள்களை நிறுவுவதை வணிக மதிப்புடையதாகக் கருதுகின்றன, அதன் அடிப்படையில் அவர்கள் அரசாங்க நிதியை நம்பாமல் அவற்றை சொந்தமாகக் கட்டத் தயாராக உள்ளனர் என்றார்.
இன்று புதன்கிழமை (ஏப்ரல் 5) நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது, கடலுக்கடியில் கேபிள் அமைப்பை நிறுவுவதற்கு அரசாங்கம் எவ்வளவு செலவழித்தது என்ற செனட்டர் அபாண்டி முகமட்டின் கேள்விக்கு பதிலளித்த தியோ இவ்வாறு கூறினார்.








