கோலாலம்பூர்: பிகேஆர் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கட்சி உறுப்பினர்களுக்கு அவர்கள் மீதுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள், அர்த்தமுள்ள மாற்றங்களை கொண்டு வருவதற்கு அவர்கள் தோளில் சுமக்க வேண்டியது நம்பிக்கை என்று நினைவுபடுத்தினார்.
பிகேஆரின் 24ஆவது ஆண்டு விழாவை ஒட்டி, அன்வார் நேற்று தனது முகநூல் பதிவில், வலுவான திருத்த நடவடிக்கைகளின் உற்சாகத்தில் கட்சி செல்கிறது என்று கூறினார்.
அதிகாரம் என்பது ‘நம்பிக்கையே தவிர சலுகை அல்ல’ என்பதை நான் எப்போதும் நினைவூட்டியிருக்கிறேன். எனவே, மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். கட்சியின் 24ஆவது ஆண்டு விழாவையொட்டி பிகேஆர் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு அன்வார் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில், பிகேஆர் தகவல் தலைவர் ஃபஹ்மி ஃபாட்சில் நேற்று தனது முகநூல் பதிவில் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சரும் பிகேஆரின் 24 ஆவது ஆண்டு விழா வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இனம், மதம் அல்லது பாலினம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மக்கள் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபடும் கட்சி பிகேஆர் என்று ஃபஹ்மி கூறினார். மலேசியா மதனிக்காக பிகேஆர் தொடர்ந்து முன்னேறட்டும் என்று அவர் கூறினார்.









