பினாங்கின் தஞ்சோங் தோக்காங் ரமலான் பசாருக்கு பேரரசர் தம்பதியினர் வருகை

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசி துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர், தஞ்சோங் தோக்காங் ரமலான் பசாருக்கு நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 6) விஜயம் செய்தனர்.

பசாருக்கு வந்த பேரரசர் தம்பதியினரை பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோவ் வரவேற்றார்.

தந்து ஒரு மணி நேர விஜயத்தின் போது, நோன்பு திறப்பதற்காக பேரரசர் தம்பதியினர் பசாரில் சிறிது உணவுகளை வாங்கினர்.

பேரரசர் தம்பதிகளை பார்த்ததும் அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர், பலர் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டதுடன், தமது சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினர்.

பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவும், துங்கு அசிசாவும் நேற்று முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு பினாங்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here