போதைப்பொருள் விநியோகிஸ்தர்களிடம் லஞ்சம் பெற்றது தொடர்பில் கைதான போலீஸ்காரருக்கு ஆறு நாட்கள் விளக்கமறியல் உத்தரவு

கடந்த ஆண்டு, சார்ஜென்ட் அந்தஸ்தில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், போதைப்பொருள் விநியோகிப்பாளர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, இன்று முதல் ஆறு நாட்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

40 வயது மதிக்கத்தக்க நபர், நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார், அதன் பின் இன்று மாவட்ட நீதிமன்றத்திற்கு மறுஆய்வு விண்ணப்பத்திற்காக அழைத்து வரப்பட்டார். குறித்த சந்தேக நபரை எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தை நீதிபதி எஸ்.புனிதா அனுமதித்தார்.

பேராக் மாவட்டக் காவல் தலைமையகத்தில் உள்ள போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர், பேராக்கைச் சுற்றியுள்ள போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து RM1,500 முதல் RM10,000 வரை லஞ்சம் கேட்டுப் பெற்றதற்காக கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பேராக் மாநில இயக்குனர், டத்தோ முகமட் பாவுசி முகமட்டை தொடர்பு கொண்ட போது, அவர் இவ்வழக்கை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here