இஸ்ரேலில் காரை கொண்டு மக்கள் மீது மோதிய பயங்கரவாதி; சுட்டு வீழ்த்திய போலீசார்

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் சார்லஸ் குளோர் பூங்கா பகுதியில் கியாஸ் நிரப்பும் நிலையம் அருகே பயங்கரவாதி ஒருவன் தனது காரை கொண்டு மக்களின் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளான். அரசு நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பால் சர்ச்சை இந்த தகவல் அறிந்ததும், டெல் அவிவ் நகர நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். பொதுமக்களின் சத்தம் கேட்டு அருகேயே இருந்த அதிகாரிகள் உதவிக்கு ஓடியுள்ளனர்.

 அந்த காரின் ஓட்டுநர், காரில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முயற்சித்து உள்ளான். உடனடியாக, போலீசார் மற்றும் ஆய்வாளர்கள் அந்த கார் ஓட்டுநரை சுட்டு வீழ்த்தி உள்ளனர்.பயங்கரவாதியின் தாக்குதலில், குடிமக்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 6 பேர் காயமடைந்து உள்ளனர். டெல் அவிவ் நகர காவல் அதிகாரி அமிசாய் ஈஷெட் கூறும்போது, சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி, சைக்கிள் நிறுத்திய பகுதியில், மக்கள் பலரை இலக்காக கொண்டு, தெளிவான திட்டத்துடன் மோதி, விபத்து ஏற்படுத்தி உள்ளான்.

 இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம், தடயம் உள்ளிட்டவற்றை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். தாக்குதலுக்கு ஆளானவர்கள் அனைவரும் சுற்றுலாவாசிகள் என கூறப்படுகிறது. இதில் பலியான நபருக்கு 30 வயது இருக்க கூடும் என மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியை மூடி, போலீசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர். தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஷெட் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here