அல் மதரஸதுல் ஃபரீதிய்யா ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் அன்பளிப்பு

அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவில்  (தஹ்ஃபீஸ் அல் குர்ஆன்) நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை  மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கம்  (பிரெஸ்மா) தலைவரரும் மதரஸா ஸ்தாபகருமான டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தய்யூப்கான் ( டத்தோ அலி மாஜு) தலைமையில் நடைபெற்றது.

இதில் வசதி குறைந்த  2,000 குடும்பங்களுக்கு 200 வெள்ளி மதிப்பிலான பொருட்களும் அன்பளிப்பும் வழங்கப்பட்டன. இந்த நோன்பு பெருநாள் அன்பளிப்பு நிகழ்வில்  புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, ஜாவியின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் அஜிப் பின் ஹாஜி இஸ்மாயில் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்ததாக டத்தோ ஜவ்ஹர் அலி  தெரிவித்தார்.

கடந்த 1995ஆம் ஆண்டு இந்த அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவிற்கு தலைமையேற்றேன். தற்போது பள்ளிவாசலுடன் மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சிக்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, உட்பட பல நல்லுள்ளங்கள் என பலரும் முழு ஆதரவு தந்துள்ளனர்.

தற்போது அல் மதரஸதுல் ஃபரீதிய்யா மாணவர்களுக்கான அல்-குர்ஆன் மனனப் பள்ளியாக விளங்குகிறது. அதே வேளையில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழியும் போதிக்கப்படுகிறது நோன்பு பெருநாளை வசதி குறைந்தவர்களும் மகிழ்ச்சியான முறையில் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் இந்த ஜகாத் வழங்கப்பட்டு வருவதாக டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here