நோன்புப்பெருநாளுடன் இணைந்து 30 பொருட்களுக்கான அதிகபட்ச விலை திட்டம் ஏப்ரல் 15 முதல் 30 வரை செயல்படுத்தப்படும்

30 பொருட்களை உள்ளடக்கிய நோன்புப்பெருநாளுடன் இணைந்து பண்டிகைக் கால அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 15) முதல் ஏப்ரல் 30 வரை 16 நாட்களுக்கு செயல்படுத்தப்படும் என்று, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் கூறினார்.

இதில் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த கோழி மற்றும் முட்டையின் அதிகபட்ச விலையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட கோழி மற்றும் முட்டை வகையைச் சேர்ந்த ஆறு வகையான பொருட்கள் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

அதிகபட்ச விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (SHMMP) 2023 இன் கீழ் கட்டுப்படுத்தப்படும் பொருட்களாக, உள்ளூர்/இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருமை இறைச்சி, கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், டோங்கோல் மீன் மற்றும் டெமுடோக் மீன், தக்காளி, சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட உருண்டை முட்டைக்கோஸ், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கடுகு கீரைகள், இறக்குமதி செய்யப்பட்ட பழைய இஞ்சி, இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம், மஞ்சள் வெங்காயம், சீன பூண்டு, இந்திய சிவப்பு வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, தேங்காய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவையும் இந்தப் பட்டியலில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here