இரு டிரக்குகள் மோதல்; இரு ஓட்டுநர்கள் பலி – மூவர் காயம்

சிபு: திங்கள்கிழமை (ஏப்ரல் 17) ஜாலான் செலாங்காவ்-முக்கா வழியாக இரண்டு பிக்கப் டிரக்குகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து 11.15 மணியளவில் தகவல் கிடைத்தது.

சிலாங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தங்கள் வாகனங்களில் சிக்கிய இரண்டு ஓட்டுநர்களை வெளியேற்றினர். அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிக்கப் டிரக்கில் பயணித்த மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். காயமடைந்த பயணிகள், ஒரு பெண் மற்றும் இரண்டு ஆடவர்கள். எங்கள் குழு வருவதற்கு முன்பு, பொதுமக்களால் அவர்கள் சிலாங்காவ் சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here