ஜோகூர் பாரு:
நேற்று மாலை டிரெய்லரில் இருந்து ஆபத்தான இரசாயனங்கள் கசிந்ததால், அயிர் ஹித்தாம் டோல் பிளாசாவின் நுழைவுப் பாதை காலவரையின்றி அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டது.
நேற்று மாலை 6.41 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் தீயணைப்புத் துறையினரால் உடனடி துப்புரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“இரவு 9.28 மணி நிலவரப்படி, ஆயிர் ஹித்தாம் டோல் பிளாசாவுக்கான நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” என்றும், துப்புரவுப் பணிகள் முடியும் வரை, வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் இந்த சாலை மூடலை PLUS மலேசியா தனது அதிகாரப்பூர்வ ஒரு ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியது.





















