போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய இரு இந்தோனேசியர்களுக்கு 8 மாத சிறை

கடந்த செவ்வாய்கிழமை போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய இரண்டு இந்தோனேசிய ஆண்களுக்கு தலா எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை கூலாய் மாவட்ட நீதிமன்றம் இன்று விதித்தது.

ரிக்கி ரினால்டி, 40, மற்றும் ஹாஜி சமிருதீன், 36, ஆகிய இருக்கும் எதிரான குற்றச்சாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஸுரீன் சாஹிரா சவுஃபி அஃபாண்டி முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் இருவரும் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் முறையே ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இருந்து சிறைத்தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

1959/63 குடியேற்றச் சட்டம் பிரிவு 56 (1A)(a) இன் கீழ், மலேசிய கடல்சார் அமலாக்க படையினரின் தடுப்பு காவலில் இருந்து வேண்டுமென்றே தப்பித்ததாக ரிக்கி மற்றும் ஹாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஏப்ரல் 11 ஆம் தேதி செங்காங்கை நோக்கிச் செல்லும் ஜாலான் ஃபெல்டா இனாஸ் என்ற இடத்தில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 224வது பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சாட்டப்பட்ட ரிக்கியும் ஹாஜியும் தங்கள் கைவிலங்குகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, வேனின் பின்பக்க கதவை உதைத்து, வெளியே குதித்து, ஒரு செம்பனைத் தோட்டத்திற்குள் ஓடினர்.

சிறைக்கு செல்லும் வேனில் இருந்து தப்பிய 24 மணி நேரத்திற்குள், ஜாலான் ஃபெல்டா இனாஸ்-கூலாய் ஆகிய தனித்தனி இடங்களில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here