மூவாரிலுள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்

மூவாரின் புக்கிட் பாசீரின் நைப் காடீரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையின் போது RM1.2 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக 54 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மூவார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ஒரு குழுவுடன் இணைந்து பொது நடவடிக்கைப் படையும் இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்ட “Ops Kontraban” நடவடிக்கையின் கீழ் சட்டவிரோத சிகரெட்டுகள் வைத்திருந்த நபரை கைது செய்ததாக, மூவார் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரைஸ் முக்ஹலீஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.

குறித்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 5,553 அட்டைப்பெட்டிகளில் வெள்ளை நிற சிகரெட்டுகள் மற்றும் 395 அட்டைப்பெட்டிகள் கிரெடெக் சிகரெட்டுகள் என பல்வேறு பிராண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

“கசந்தேக நபர் கடந்த ஒரு வருடமாக மூவாரை சுற்றி கடத்தல் பொருட்களை கொண்டு சென்று விநியோகித்து வருவதாகவும் போலீசார் நம்புகின்றனர்.

சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 15) முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், என்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த அல்லது விற்பனை செய்ததற்காக சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 (1) (d) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here