மனிதவளத்துறை அமைச்சரின் இரு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்

புத்ராஜெயா: வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மனிதவளத்துறை அமைச்சர் வ.சிவகுமாரின் இரண்டு மூத்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை (ஏப்ரல் 17) அவர்களது காவல் உத்தரவு முடிவடைந்ததையடுத்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்தின. மேலும் மூன்றாவது சந்தேக நபரான வர்த்தகரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 12 ஆம் தேதி, தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த 40 முதல் 50 வயதுடைய மூத்த அதிகாரி மற்றும் தொழிலதிபர் கைது செய்யப்பட்டனர்.

மூத்த அதிகாரி DAP Socialist Youth (Dapsy)  பிரிவின் முன்னாள் தலைவர் என்று கூறப்படுகிறது. இருவரும் ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 17 அன்று, தனிச் செயலாளர் பதவியை வகிப்பதாக நம்பப்படும் ஒரு பெண் மூத்த அதிகாரி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் நான்கு நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டாள்.

மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் இருவரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு உதவுவதற்காக ஞாயிற்றுக்கிழமை, எம்ஏசிசி அதிகாரிகள் சிவகுமாரை அழைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here