வரும் வெள்ளிக்கிழமையை (ஏப்ரல் 21) கூடுதல் பொது விடுமுறையாக சபா அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர் தெரிவித்தார்.
“இது சபா பொது விடுமுறை ஆணைக்கு இணங்க அறிவிக்கப்பட்டதாக “அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறினார்.
நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 1 சியாவால் வரும் நாளைப்பொறுத்து, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) அல்லது திங்கட்கிழமை (ஏப்ரல் 24) கூடுதல் பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
மேலும் சபா மற்றும் சரவாக்கிற்கு, மாநில அரசுகள் அந்தந்த பொது விடுமுறை ஆணையின்படி தொடர்புடைய தேதிக்கு பொது விடுமுறையை அறிவிக்கலாம் என்றும் அன்வார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.









